Sunday, March 01, 2009

ஈழத் தாயின் கேள்வி

என்றெனக்கு ஒரு விடியல் - மகளே
என்றெனக்கு ஒரு விடியல்?
இன்றைக்கு நாளைக்கென எனை - மிக
ஏமாற்றியே காலம் கழித்தாய்.
சண்டைக்குப் போன கரும் புலிகளின்
சாம்பலை அள்ளீக் கொணர்ந்தாய்
கன்றுகளைக் காவு கொடுத்து- என்
கருவறையில் கல்லறைகளாக்கினாய்
இன்றைக்குமது எண்ணம் மாறியதேனோ?- ஏன்
இப்படித் துவண்டு போனாய்?

வீர மரணமென்றெண்ணி -ஒவ்வொரு சாவிலு
மென் வயிற்றுக் கொதிப்படக்கினேன்
போராட்ட வரலாறில் உயிர் போவது
சகஜமென்று துயர் தட்டிக் கழுவினேன்
சாதாரணமாய் சமாதானமாகிவிடுவாயென்றால் - என்
தங்கங்களையா காவு கொடுத்தேன்?
தோராயமா யவர் கொடுப்பதை வாங்கி வர - என்
சுதந்திரமென்ன பிச்சையா எனக்கிங்கு?

5 comments:

செம்மதி said...

சகோதரி உங்கள் மனிதாபிமான மனத்திற்கு தலைவணங்குகின்றேன்.
........செம்மதி........

A Pucca Chennaite said...

I loved your poem! AWESOME!!

முல்லை அமுதன் said...

kavithaikal nantru.
mullaiamuthan.

முல்லை அமுதன் said...

vaazhthukkal.
nantru.thodarka.
http://kaatruveli-ithazh.blogspot.com/

D.Martin said...

அம்மா, தமிழ் நாட்டில் வெட்ககேடான தமிழர்களில் நானும் ஒருவன். உங்கள் கவிதையும் ஒரு ஆயுதமே, தொடர்ந்து எழுதுங்கள்